தமிழில் கணினி செய்திகள்

கூகுள் மூலமாக தேடிய உங்களுடைய வரலாற்றை அறிய (Google - Search History)

♠ Posted by Kumaresan Rajendran in at May 11, 2015
கூகுள் மூலமாக மட்டுமே நாம் பல்வேறு இணைய தள முகவரிகளை கண்டறியக்கூடும். நமக்கு ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே கூகுள் மூலமாக தேடி குறிப்பிட்ட செய்தியை பெற்றுக்கொள்வோம். இவ்வாறு நாம் கூகுளின் மூலமாக எப்படி, எந்த நேரத்தில் எல்லாம் தேடியுள்ளோம் என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். 

தளத்திற்கான சுட்டி




இந்த தளத்தில் நீங்கள் உள்நுழைந்தவுடன் வகை வாரியாக உங்களுடைய வரலாற்றினை பட்டியட்டு காட்டும். மேலும் மாத வாரியகவும், வார வாரியகவும், மேலும் மணி வாரியாகவும் இதனை பிரித்து காட்டும். நீங்கள் கூகுள் மூலமாக தேடிய இவற்றை அளித்துக்கொள்ளவும் முடியும்.


குறிப்பிட்ட தெரிவுகளை தெரிவு செய்து பின் அதனை நீக்கி கொள்ளவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.


நீங்கள் குறிப்பிட்ட உங்களுடைய கூகுள் கணக்கில் உள்நுழைந்த பின்னரே இவற்ற எல்லாம் காண முடியும். மேலும் உங்களுடைய கணக்கு உழ்நுழைந்த பின் தேடியவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள தளத்தில் காண முடியும்.




Google - Search History வசதியினை டிசேபிள் செய்ய:
நண்பர் கதிர்வேல் கூறியதை தொடர்ந்து , Google Search history வசதியினை டிசேபிள் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மேலே குறிப்பிட்டுள்ள சுட்டியில் நுழைந்த பின் செட்டிங்ஸ் ஐகானை கிளிக் செய்து, தோன்றும் தேர்வில் Settings என்பதை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Your searches and browsing activity என்பதற்கு எதிரே உள்ள இழு விசை பொத்தானை இடது பக்கமாக கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் PAUSE என்னும் பொத்தானை அழுத்தவும்.


அவ்வளவு தான் வேலை முடிந்தது. இனி நீங்கள் உங்களுடைய கூகுள்கணக்கில் உள்நுழைந்து தேடும் எதுவும் , கூகுள் மூலமாக சேமிக்க படாது.


மேலும் இது போன்று யூடுப் தளத்தில் நாம் தேடும் அல்லது பார்க்கும் வீடியோக்களையும் சேமித்து வைத்திருக்கும், அதனையும் நமது வசதிகேற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும். அதற்கு மேலே குறிப்பிட்டுள்ள விண்டோவில் தோன்றுவது போல் SHOW MORE SETTINGS பொத்தானை கிளிக் செய்யவும்.


யூடுப்பில் தேடும் அனைத்து விதமான வீடியோ பட்டியலும், பார்க்கபடும் வீடியோ பட்டியலும் தனித்தனியே சேமிக்க படும். மேலும் கூகுள் வாய்ஸ் மூலம் நாம் தேடும் தேடல்களும் தனியே சேமிக்கப்படும். இவையனைத்தையும் நாம் டிசேபிள் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

8 Comments:

இந்த வசதியை அனைவரும் நிறுத்தி வைத்துக்கொள்வது நல்லது. ஒருவருடைய Privacy ஐ இது கடுமையாக பாதிக்கிறது. நம்முடைய இணைய தேடல்களை கண்காணிக்க கூகுளுக்கு என்ன உரிமை இருக்கிறது.

//stalin wesley said

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.

//இரா.கதிர்வேல் said

உங்களுடைய இந்த கோபம் எந்த அளவிற்கு ஏற்புடையது என்று தெரியவில்லை. முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கூகுள் இதையும் ஒரு வசதியாக தான் பயனாளர்களுக்கு அளிக்கிறது.

இது மட்டும் அல்ல நீங்கள் அனுப்பு மின்னஞ்சல் முதற்கொண்டு அனைத்து விதமான உங்களுடைய செயல்பாடுகளையுமே கூகுள் கவனிக்கிறது. அவை எதுவும் நமக்கு தெரிவது இல்லை.

Terms & conditions ல் நாம் கூகுள் கணக்கினை தொடங்கும் போது இவை அனைத்தும் குறிப்பிட பட்டுள்ளது என்று கூகுள் தெரிவிக்கிறது. எனவே இவையனைத்தையும் ஏற்கும் மன நிலை இருந்தாலே நீங்கள் கூகுளை பயன்படுத்த முடியும்.

நான் இந்த வசதியை என்னுடைய கணக்கில் நிறுத்தி வைத்துவிட்டேன். முடிந்தால் இந்த வசதியை எப்படி நீக்குவது என்ற விபரத்தையும் இந்த பதிவில் கூடுதல் செய்தியாக குறிப்பிட்டால், என்னைப் போன்று privacy யை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

//இரா.கதிர்வேல் said

கண்டிப்பாக பதிவிடுகிறேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று பதிவை திருத்தம் செய்து கூடுதல் தகவலுடன் வெளியிட்டதற்கு நன்றி குமரேசன்.

//இரா.கதிர்வேல் said

நன்றி கதிர்வேல்.

Post a Comment