தமிழில் கணினி செய்திகள்

பேஸ்புக்கில் உள்ள படங்களை ஜூம் செய்து பார்க்க

♠ Posted by Kumaresan R in ,, at 3:39 PM
பேஸ்புக் தளத்தில் தினமும் லட்சக்கணக்கான போட்டோக்கள் பதிவேற்றம் மற்றும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இவ்வாறு உள்ள போட்டோக்களை நாம் ஒப்பன் செய்து பார்த்தால் மட்டுமே முழு போட்டோவினையும் முழுமையாக காண முடியும். இதற்கு பதிலாக போட்டோவினை ஒப்பன் செய்யாமலையே , போட்டோக்களை ஜூம் செய்து பார்க்கவும் முடியும் இதற்கு கூகுள் குரோம் நீட்சி ஒன்று உதவி செய்கிறது.

நீட்சியினை  குரோம் உலாவியில் இணைத்து கொள்ள சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியினை குரோம் உலாவியில் இணைத்துக்கொள்ளவும். பின் ஒருமுறை குரோம் உலாவியை மறுதொடக்கம் செய்யவும். இப்போது உங்களுடைய முகநூல் கணக்கில் நுழைந்து ஏதாவது ஒரு படத்தின் மேல் உங்களுடையை சுட்டெலியை கொண்டு செல்லவும். தற்போது போட்டோவானது ஜூம் செய்யப்படும்.மேலும் குழுவாக முகநூலில் உள்ள அனைத்து போட்டோக்களையும் இந்த வசதியை பயன்படுத்தி எளிமையாக ஜூம் செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment