தமிழில் கணினி செய்திகள்

ஆன்ட்ராய்ட் அடுத்த பதிப்பு - Android M

♠ Posted by Kumaresan R in at 7:50 PM
ஆன்ட்ராய்ட் இயங்குதளம் மொபைல் மற்றும் டேப்லெட் சாதனங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்ட்ராய்ட் சாதனங்களுக்கு என அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டு செயலிகள் லட்சக்கணக்கில் இலவசமாகவே கிடைக்கிறது. இதனால் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட மொபைல்கள் சந்தையில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டோ வருகிறது.

இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் ஏழாவது வெளியீடான Android  M சோதனை பதிப்பு தற்போது டெவலப்பர்களுக்காக நெக்சஸ் (5,6,9 மற்றும் ப்ளேயர்) சாதனங்களில் மட்டும் இயங்கும் வன்னம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பில் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகள் சரி செய்யப்பட்டுள்ளது. அதில் சில முக்கிய அம்சங்களை பற்றி பார்ப்போம்.


மென்பொருள் அனுமதி:
ஆன்ட்ராய்ட் 5.0 இயங்குதளத்தில் செயலிகளை நிறுவும்போது மட்டுமே முழு அனுமதியையும் கேட்கும். ஆனால் இந்த ஆன்ட்ராய்ட் 6.0 (Android M) ல் , அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் போதும் இந்த அனுமதியை கேட்கும் வன்னம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உங்களுடைய ஆன்ட்ராய்ட் சாதனம் மிக விரைவாக செயல்படும். 


பேட்டரியின் செயல்பாடு:
ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் மிகப்பெரிய பிரச்சினை என்னவெனில் பேட்டரியின் செயல்பாட்டு திறன். இதனை சரி செய்யும் விதத்தில் ஆன்ட்ராய்ட் எம் இயங்குதளத்தில் Called Doze என்னும் புதிய நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் பின்புலமாக இயங்கும் சில அப்ளிகேஷன்கள் நிறுத்தப்படும். இதன் காரணமாக பேட்டரிகளின் ஆயுள்காலம் நீடிக்கும். மேலும் USB Type-C என்னும் வசதி மூலமாக மிக விரைவாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் இந்த பதிப்பில் வெளிவர உள்ளது என்பது கூடுதல் செய்தியாகும்.


டேப்:
ஆன்ட்ராய்ட் எம் இயங்குதளத்தில் டேப் என்னும் புதிய வசதி அறிமுகப்படுத்தபட உள்ளது. இதன் மூலம் அனைத்து உதவிகளையும் கூகுள் மூலமாக எளிதில் பெற முடியும். உதாரணமாக உங்கள் நண்பர் ஒரு ரெஸ்டாரண்டினை பற்றி குறுந்தகவல் அனுப்புகிறார். நீங்கள் அந்த ரெஸ்டாரண்ட் பற்றிய முழுவிவரங்களையும் மிக விரைவாக பெற முடியும். குறிப்பிட்ட அப்ளிகேஷனில் பணியாற்றிக்கொண்டே நமக்கு தேவையான தகவல்களை பெற முடியும். 


Fingerprint (கைரேகை):
கணினிகளில் முன்பிருந்தே இந்த சேவை உள்ளது, பாதுகாப்பாக கணினியை வைத்துகொள்ள கடவுச்சொல் கொண்டு பூட்டிவைப்போம். அதற்கு சிறந்த வழியாக இந்த Fingerprint வசதி இருக்கிறது. இதன் மூலம் உங்களுடைய கணினியை எவரும் பயன்படுத்த இயலாது. தற்போது ஆன்ராய்ட் எம் இயங்குதளத்திலும் இந்த Fingerprint வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுடைய சாதனம் காக்கப்படும்.

கூகுள் குரோம் டேப்:
இந்த வசதி மூலம் இணையத்தில் குரோம் உலாவியில் உலாவரும் போதே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை அடுத்த டேப்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

4 comments:

நிறுவம்போது மட்டுமல்லாமல் செயலியை பயன்படுத்த தொடங்கிய பின்னர் அனுமதி மட்டறுப்பது iOSன் தாக்கம்.

மெபைல் கிடைக்கிறன செயளிகளை // பிழைகள் அதிகம் உள்ளது . சரி செய்யவும் நன்றி நண்பா

//Rajkumar Ravi said

நன்றி ராஜ்குமார்.

//stalin wesley said

எழுத்து பிழைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன.

Post a Comment