தமிழில் கணினி செய்திகள்

PDF - கோப்புகளை ரொட்டேட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,, at March 27, 2013
ஸ்கேன் செய்து கோப்புகளை Pdf பைலாக மாற்றும் போது தலைகீழாக இருக்கும், அல்லது அதன் திசை மாறி இருக்கும். சாதரணமாக போட்டோ, வீடியோக்கள் தலைகீழாக இருந்தால் அதைனை அதற்குரிய எடிட்டர்கள் கொண்டு சரிபடுத்திக்கொள்ள முடியும். 

ஆனால் பிடிஎப் டாக்குமென்ட்கள் தலைகீழாகவோ அல்லது முறையாக இல்லாமல் இருந்தால் அதனை சரிபடுத்தி கொள்ள இலவச மென்பொருள் ஒன்று உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திலிருந்து மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த PDF Rotator அப்ளிகேஷனை ஒப்பன் செய்து  அதில் மாற்ற வேண்டிய பிடிஎப் பைலை இணைக்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட பிடிஎப் பைல்கள் இருந்தால் அதனை ஒரு கோப்பறையில் (Folder) வைத்து மொத்தமாக ஒப்பன் செய்யவும். 

பின் எந்த திசைக்கு டாக்குமெண்ட்களை திருப்ப வேண்டுமென அதை தேர்வு செய்துவிட்டு பின் Rotate PDF Now என்னும் பொத்தானை அழுத்தவும்.


சில நொடிகளில் நீங்கள் குறிப்பிட்ட திசையில் டாக்குமெண்ட் கண்வெர்ட் செய்யப்பட்டு ஒப்பன் ஆகும். அதை நீங்கள் வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்.

2 Comments:

பயனுள்ள தகவல் நன்றி நண்பா

Post a Comment