தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்

கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் சரியாக மென்பொருள்களை நிறுவி பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஒன்றுக்கும் அதிகமான வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், மற்றும் உலாவிகளை நிறுவி இருப்பார்கள் தவிர அவசியமான இன்னும் பிற மென்பொருள்களும் கணினிக்கு கட்டாயம் தேவை.

விண்டோஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவி விடுவோம். பின் ஆண்டிவைரஸ் நிறுவுவோம். பின் தேவையான ட்ரைவர் நிறுவுவோம். இன்னும் ஒருசில மென்பொருள்களை நிறுவிவிட்டு அப்படியே விட்டுவிடுவோம்.  ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு கணினியானது மந்தமாக செயல்படும் இதற்கு காரணம். அவ்வப்போது தற்காலிகமாக தங்கும் கோப்புகளை நீக்கம் செய்யாதது. முறையாக மென்பொருள் நிறுவாமை போன்ற பல காரணங்கள் ஆகும்.

விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும். அவை எவையென்று பார்ப்போம்.

1.சிறந்த ஆண்டிவைரஸ்


விண்டோஸ் இயங்குதளத்தில் கட்டாயம் ஆண்டிவைரஸ் மென்பொருள் தேவை, ஆண்டிவைரஸ் இல்லையெனில் வைரஸ் நம் கணினியில் புகுந்து அனைத்து கோப்புகளையும் நாசம் செய்து விடும். இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் நம்முடைய கோப்புகள் அனைத்தும் திருடப்பட்டுவிடும். எனவே கண்டிபாக விண்டோஸ் இயங்குதளத்தில் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருப்பது அவசியம் ஆகும்.

மைரோசாப்ட் நிறுவனமே வைரஸ்களை எதிர்க்க மற்றும் அழிப்பதற்கு ஆண்வைரஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர் Microsoft Security Essentials. கீழே குறிப்பிட்டுள்ள சுட்டியில் ஏதாவது ஒன்றை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். இவை யாவும் இலவசமாக கிடைக்க கூடிய மென்பொருள்கள் ஆகும். இன்னும் சில மென்பொருள்கள் சந்தையில் பணம் கொடுத்து வாங்கியும் பயன்படுத்தலாம்.

 ஆண்டிவைரஸ் மென்பொருளகளை தரவிறக்கம் செய்ய சுட்டிகள்


2.ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர்கள்



ஆடியோ மற்றும் வீடியோக்களை கணியில் இயக்க ஏதாவது ஒரு பிளேயர் கண்டிப்பாக இருத்தல் அவசியம் ஆகும். இதில் மிகவும் பிரபலமானது VLC பிளேயர் ஆகும். இந்த VLC பிளேயர் ஒரு ஒப்பன்சோர்ஸ் மென்பொருள் ஆகும்.

தரவிறக்க சுட்டிகள்


3.ரிஸிஸ்டரி கிளினர்
விண்டோஸ் இயங்குதளத்தில் தற்காலிகமாக தேங்கியுள்ள கோப்புகளை நீக்கவும். ரிஸிஸ்டரி பிழைகளை நீக்கவும் மற்றும் கணினியில் வேகத்தை அதிகபடுத்தவும் இதுபோன்ற ரிஸிஸ்டரி கிளினர் மென்பொருள்கள் பயன்படுகின்றன.

தரவிறக்க சுட்டிகள்

4.சீடி/டிவிடி மென்பொருள்கள்


சிடி மற்றும் டிவிடியில் தகவல்கள்களை பதிவேற்றம் செய்ய அதிகமான கணினி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தபடுகிறது. இமேஜ் பைல்களை பூட்டபிள் பைல்களாகவும். ஆடியோ மற்றும் வீடியோக்களை சிடி/டிவிடியில் பதிவேற்றம் செய்யவும் இது போன்ற பர்னிங் மென்பொருள்கள் பயன்படுகிறது.

தரவிறக்க சுட்டி

 5.உலாவிகள்
இணைய பக்கங்களை வலம் வர பயன்படுத்தபடுவது உலாவிகள் ஆகும். இதில் மிகவும் சிறப்பானது நெருப்புநரி மற்றும் கூகுள் குரோம் உலாவிகள் ஆகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோஸ் இயங்குதளத்திலேயே இருப்பியல்பாக இருக்கும்.

தரவிறக்க சுட்டிகள்

 6.ஆப்பிஸ் தொகுப்புகள்

ஆப்பிஸ் தொகுப்பில் மிகவும் பிரபலமானது மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பாகும்.  இதனை விலைக்கொடுத்து வாங்க வேண்டும். இன்னும் இதைவிட சிறப்பான ஒப்பன் சோர்ஸ் ஆப்பிஸ் தொகுப்புகள் இலவசமாக கிடைக்கிறன. அதில் சிறப்பானது ஒப்பன் ஆப்பிஸ் தொகுப்பாகும்.

தரவிறக்க சுட்டிகள்

7.பிடிஎப் ரீடர்

பிடிஎப் பைல்களை கையாள கண்டிப்பாக பிடிஎப் ரீடர்கள் அவசியம், இதில் மிகவும் பிரபலமானது அடோப் பிடிஎப் ரீடர் ஆகும்.  இதை தவிர இன்னும் சில சிறப்பான பிடிஎப் ரீடர்களும் உள்ளது அதில் குறிப்பிடதக்கது Foxit Reader ஆகும்.

தரவிறக்க சுட்டிகள்


8.7-ஜிப்

கோப்புகளை சுருக்கி விரிப்பதற்கு பயன்படும் மென்பொருள் ஆகும். 7 ஜிப் மென்பொருளானது ஒப்பன் சோர்ஸ் ஆகும். 

7-ஜிப் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி  
வின்ரேர் தரவிறக்க சுட்டி

9.டவுண்லோட் மேனேஜர்கள் 



இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கம் வேகமாக நடைபெறவும். முழுமையாக பதிவிறக்கம் செய்யவும் இந்த இணைய பதிவிறக்க மென்பொருள் பயன்படுகிறது.

மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி

 10.டோரன்ட் 

டோரண்ட் பைல்களை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் ஆகும். Utorrent, Bittorrent மென்பொருள்கள் இதில் சிறப்பானவைகள் ஆகும்.

யூடோரன்ட் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

11.அடோப் போட்டோசாப் / கிம்ப்
போட்டோக்களை எடிட்டிங் செய்ய உதவும் மென்பொருள் போட்டோசாப் ஆகும். இது இலவசமாக கிடைக்காது இதற்கு மாற்று மென்பொருள் கிம்ப் ஆகும். இது ஒப்பன் சோர்ஸ் மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

12.ஆடியோ / வீடியோ எடிட்டிங் மென்பொருள்


ஆடியோ மற்றும் வீடியோக்களை எடிட் செய்ய உதவும் சிறந்த மென்பொருள் Media Cope ஆகும். இந்த மென்பொருள் உதவியுடன் ஆடியோ வீடியோ சம்பந்தமான அனைத்து வேலைகளையும் செய்ய முடியும்.

தரவிறக்க சுட்டிகள்


13.அடோப் ப்ளாஷ் பிளேயர்

இணையத்தில் உள்ள வீடியோக்களை காண இந்த அடோப் ப்ளாஷ் பிளேயர் பயன்படுகிறது. யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோவை காண வேண்டுமெனில் கண்டிப்பாக அடோப் ப்ளாஷ் பிளேயர் கண்டிப்பாக தேவைப்படும்.

ப்ளாஷ் பிளேயரை தரவிறக்கம் செய்ய சுட்டி

14.மால்வேர் பைட்ஸ்


மால்வேர்களை நீக்க பயன்படும் மென்பொருள் ஆகும். கணினியின் வேகத்தை அதிகபடுத்தவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

15.பயர்வால் 

கணினியை மால்வேர்களிடம் இருந்து காப்பதற்கு பயன்படும் மென்பொருள் பயர்வால் ஆகும். தேவையற்ற அப்ளிகேஷன்களையும்/வலைமனைகளை  தடுக்கவும் பயர்வால் உதவும்.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

16.டீம் வியூவர்



இணைய உதவியுடன் டெஸ்க்டாப்பினை பகிர்ந்து கொள்ள உதவும் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

17.நோட்பேட்++
`நிரலாக்க மொழிகளை சிறப்பாக கையாளுவதற்கு உதவும் மென்பொருள் Notepad++ ஆகும். இந்த மென்பொருளை கொண்டு நிரலாக்க மொழிகளை கையாளும் போது பிழைகளை எளிதில் கண்டறிந்து நீக்க முடியும்.

தரவிறக்க சுட்டி

18.போல்டர் லாக்




சுய விவரங்களையும் பூட்டி வைக்க உதவும் மென்பொருள் ஆகும். கண்டிப்பாக அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள்.

தரவிறக்க சுட்டி

19.சேன்ட்பாக்ஸி


இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் மென்பொருள்களில் வைரஸ் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உதவும் மென்பொருள் ஆகும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 

20.தமிழ் எழுத்துரு மென்பொருள்  



தமிழிலில் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள் ஆகும். தமிழில் லதா பான்ட் கொண்டு தட்டச்சாகும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், அசாம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாப்பி , குஜராத்தி, பெங்காளி, ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளையும் இந்த மென்பொருள் கொண்டு தட்டச்சு செய்யலாம். அளவில் மிகச்சிறிய மென்பொருள்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

21.பைல் ஒப்பனர்


அனைத்து விதமான பைல்களையும் ஒப்பன் செய்ய உதவும் மென்பொருள், இலவச மென்பொருள். 80+ அதிகமான பைல் பார்மெட்களை ஆதரிக்கிறது இந்த மென்பொருள்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

22.விஎம்வேர் வோர்க்ஸ்டேஷன்


இந்த மென்பொருளில் உதவியுடன் கணினியின் உள்ளே இயங்குதளங்களை நிறுவ முடியும். புதியதாக இயங்குதளங்களை நிறுவ கற்றுகொள்ளும் போது இந்த மென்பொருள் உதவியுடன் எளிதாக நிறுவி கற்றும் கொள்ள முடியும்.

மேலும் விஎம்வேர் பற்றி அறிய சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

23.டீப் ப்ரீசர்


அனைத்து மென்பொருள்களையும் நிறுவிவிட்டு பின் இறுதியாக இந்த மென்பொருளை நிறுவவும். இந்த மென்பொருளை நிறுவும் போது நாம் எந்த கோலனை குறிப்பிடுகிறோமோ அதில் சேமிக்கும் தகவலோ நிறுவும் அப்ளிகேஷன்களோ கணினியை மறுதொடக்கம் செய்யும் போது தானாகவே அழிந்துவிடும். 

மென்பொருள்களை தரவிறக்க சுட்டி

24.ஸ்லிம் ட்ரைவர்


ட்ரைவர்களை இணைய உதவியுடன் இன்ஸ்டால் செய்யவும், அப்டேட் செய்து கொள்ளவும் இந்த மென்பொருள் உதவும்.

தரவிறக்க சுட்டி

25.சைபர்லிங் யூகேம்


வெப்கேமிரா மூலம் படம் மற்றும் வீடியோ எடுக்க உதவும் மென்பொருள் ஆகும்.

தரவிறக்க சுட்டி

மேலே குறிப்பிட்டுள்ள மென்பொருள்  தொகுப்பில்  ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் குறிப்பிட்டுள்ளேன். அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் தெரிவு செய்து கொள்ளவும்.

41 Comments:

நல்லதொரு தொகுப்பு...

பலரும் அறிந்து கொள்ள பகிர்கிறேன்...

நன்றி...

இப்பதிவு எனக்குப் பயனுள்ளதாக உள்ளது.

மிக்க நன்றி.

நல்ல பதிவு பலருக்கும் பயன் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை நன்றிகள் நண்பரே இது போல் பல எதிர்ப்பார்க்கின்றோம்

Dear brother very very useful collection . Thank u for sharing .

அருமையாக தொகுத்துள்ளீர்கள் குமரேசன்.

வருகைதந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி
திண்டுக்கல் தனபாலன்,
பட்டிகாட்டான்,
murugaraj muthu ,
’பசி’பரமசிவம்,
G VARADHARAJAN,
அ.குரு,
இரா.கதிர்வேல்.

நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

அனைவருக்கும் உதவும் வகையில் சிறப்பான விளக்கத்துடன் கூடிய இணைப்புகள்...

very useful information.. thanks bro

நன்றி,

பத்மநாபன்,
இரவின் புன்னகை,
Arockia,
Imam.

அருமை நண்பரே!!!. idm மூலமாக torrent file-களை வேகமாக டவுன்லோட் செய்யலாம் என்று உங்களுடைய பதிவில் சொன்னீர்கள்.torrent file-ஐ copy செய்து நீங்கள் சொன்ன வெப்சைட் தலத்தில் paste செய்தேன் ஆனால் டவுன்லோட் ஆகவில்லை.விளக்கவும் நண்பரே

//hakkeem sait

நண்பரே நீங்கள் zbigz.com தளத்தில் ஒரு பயனர் கணக்கினை இலவசமாக உருவாக்கி பின் முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக பதிவிறக்கம் ஆகும்.

usefull da kumaresa.....thanks

Thank U So Much For the useful information It's very help to all
Thank u

very useful information for all peoples

நல்ல மென்பொருள்களின் தொகுப்பு ,ஆனால் பாதிக்கு மேல் கட்டண மென்பொருட்கள் .யு டோர்ரென்ட் முதலில் நிறுவினால் தான் மற்றதை நிறுவ ஏதுவாக இருக்கும் :)

dear friend, yennoda laptop la windows 7 and inux os iruku naan yeppadi linux a remove pannalam nu ungaluku theringha sollunga plz,my mail id rameshrajaking777@gmail.com

என்னை அதிக நேரம் இருக்க வைக்கும் பதிவுகளில் முதன்மையானது உங்க தலமே தொகுப்புக்கு நன்றி.

விண்டோஸ் கிராஷ் ஆவதும் பின்னர் தானாகவே சரி செய்துகொள்வதும் எனக்கு தொடர்ந்து நிகழ்கிறது . இதனை எப்படி முறை படுத்தலாம் என விளக்குவீர்களா?

நன்றி

இப்பதிவு எனக்குப் பயனுள்ளதாக உள்ளது.

மிக்க நன்றி.

Very useful even i am using the desktop more than 15years

Thank you , it is very wonderful,
i am very happy now to see your blogs
i wish god will give more and more knowledge to you ,
that will help to Tamil people for increase their knowledge.

plz give approval for my comment,
because i tell by full mind with kind

இத்தனை நாள் இதை பார்க்காமல் போய்விட்டோமே என வருத்தமாக உள்ளது. உங்கள் தொகுப்புக்கு மிகவும் நன்றி....R2ரத்தினம் தூத்துக்குடி.

உங்கள் சேவை பாராட்டுக்குறியது. எங்களைப்போல் புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. உங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

சிறப்பான மற்றும் உபயோகமான தகவல். நன்றி,

Post a Comment