தமிழில் கணினி செய்திகள்

நெருப்புநரி உலவியில் கடவுச்சொற்களை காப்பாற்ற முதன்மை கடவுச்சொல்

♠ Posted by Kumaresan Rajendran in at April 04, 2011
நெருப்புநரி உலவியின் துணைக்கொண்டு இணைய பக்கங்கங்களை வலம் வரும்போது பல தளங்களில் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களை உள்ளிட்டு பல்வேறு கணக்குகளில் நுழைவோம். அந்த சூழ்நிலைகளில் நம்மை அறியாமலேயே பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை சேமித்துவிடுவோம். நம்முடைய சொந்த கணினியாக இருந்தாலும், மிக முக்கியமான கடவுச்சொற்களாகிய பேங்க் சம்பந்தமான கடவுச்சொற்கள் சேமிக்கப்படும் போது அது நமக்கு பெரும் ஆபத்தாகும். இதனால் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும். நம்முடைய கணக்கில் உள்ள பணத்தினை இழக்க நேரிடும். அல்லது நம்முடைய கணக்கானது முடக்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டுமெனில் இந்த உலவியில் பதியப்பட்ட கடவுச்சொல்லை முழுமையாக நீக்க வேண்டும். கடவுச்சொல்லை நீக்க சுட்டி. இல்லை இந்த கடவுச்சொல்களுக்கே கடவுச்சொல் இட்டு பாதுகாத்தால் எப்படி இருக்கும். கடவுச்சொல்களுக்கு எவ்வாறு கடவுச்சொல்லை உருவாக்கு என்று கீழே காண்போம்.

முதலில் நெருப்புநரி உலவியினை திறந்து கொள்ளவும். பின் Tools > Option என்பதை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்தவுடன், தோன்றும் விண்டோவில் Security டேப்பினை தேர்வு செய்து, அதில் “Use a master password” என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். 


டிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய முதன்மை கடவுச்சொல்லினை உள்ளிட்டு ஒகே செய்யவும்.


அவ்வளவுதான் இனி நீங்கள் உங்களுடைய சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லை காண வேண்டுமானால் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகுதான் காண முடியும். சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லோடு தொடர்புடைய வலைப்பக்கத்திற்கு சென்றால், முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட சொல்லி ஒரு பெட்டி தோன்று அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு அந்த தளத்தில் நுழைந்து கொள்ள முடியும். மொத்தத்தில் தவறு செய்தாலும் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்பதை போல, ஏற்கனவே பல்வேறுகடவுச்சொற்கள் சேமிக்கப்பட்டுள்ளது அதை பாதுக்காக்க முதன்மை கடவுச்சொல்.

2 Comments:

Post a Comment