தமிழில் கணினி செய்திகள்

PDF to JPG கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,, at March 13, 2011
டாக்குமெண்ட்களை பறிமாறிக்கொள்ள தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் பார்மெட்களில் pdf பார்மெட்டும் ஒன்றாகும். இந்த pdf பைல் பார்மெட் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில கணினிகளில் pdf  ரீடர் இருக்காது. அதுபோன்ற கணினிகளில் pdf பைல்களை நம்மால் காண இயலாது. pdf டாக்குமெண்டில் உள்ள தகவல்களை காண நாம் அந்த பைல்களை வேறு ஒரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டும். வேர்ட் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல வழிகள் உள்ளன.  பிடிஎப் பைல்களை வேர்ட் பார்மெட்டாக கன்வெர்ட் செய்யும் போது பல பிரச்சினைகள் உள்ளன. தமிழ் எழுத்துரு பிரச்சினை வரக்கூடும். இதனால் நம்மால் டாக்குமெண்ட்களை முழுமையாக காண முடியாது. இந்த pdf பைல்களை நாம் இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்யும் போது எந்த வித பார்மெட்டும் மாறாது. இவ்வாறு pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல வழிகள் உள்ளன. நாம் ஆன்லைனில் இருந்தவாறே பைல்களை கன்வெர்ட் செய்ய முடியும். ஆனால் இணைய இணைப்பு இல்லாத கணினிகளில் pdf பைல்களை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் மென்பொருளின் உதவியை நாட வேண்டும்.  pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய இணையத்தில் நிறைய மென்பொருள்கள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் PDF To JPG.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து நீங்கள் மாற்ற நினைக்கும் இமேஜ் பைல் பார்மெட்டை தேர்வு செய்து (JPG, TIF, BMP, PNG மற்றும் GIF) பிடிஎப் பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். 


இவ்வாறு pdf பைலை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்யும்போது எந்தவிதமான பிரச்சினையும் நேராது. pdf டாக்குமெண்ட்களை இமேஜ் (JPG, TIF, BMP, PNG மற்றும் GIF) பார்மெட்டாக கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

7 Comments:

இத இத இததான் தேடினேன்

மிக்க நன்றி

நன்றி,
rajatheking,
Victory Ads.

How To Download This, Please Tell....

//Viswam said
How To Download This, Please Tell//

http://www.pdfjpg.com/down/pdftojpg.exe

இப்போது இந்த வலைப்பூ எனக்கு உற்ற தோழனாகி விட்டது. பிரச்சனை ஏற்படும் போதெல்லாம். இங்கே ஏதாவது ஆலோசனை கிடைக்குமா என்றுதான் எட்டிப் பார்க்கிறேன். தள நிர்வாகியின் உழைப்புக்கும் முயற்சிக்கும் நன்றிகள் பல.

மலேசியாவின் ஒரு தனியார் தனியார் நிறுவனத்திற்காக செய்திகளை சந்தாதாரர்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பும் வேலையைப் பகுதிநேரமாகச் செய்கிறேன். படவடிவில் (இமேஜ்) அனுப்பப்படும் செய்திகள் தெளிவாக இல்லை என்று ஏராளமான புகார் வந்து கொண்டிருக்கிறது. இதை எப்படிக் கையாளலாம் என்பதற்காக இந்த வலைப்பூவில் மீட்டும் தலையை நுழைத்தேன்.

அந்த வகையில்தான் இப்பதிவு அகப்பட்டது. இன்னும் சில நொடிகளில் அதனைப் பயன்படுத்தத் தொடங்குவேன். சந்தாதாரர்களின் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியுமா என்று பார்ப்போம்.


இன்னொன்று.....

என்னிடம் ஏராளமான இண்டோவெப் எழுத்துருக்கள் (ஃபாண்டுகள்)உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மென்பொருளைத் தவிர வேறு எதுவும் உண்டா?

இந்த எழுத்துருக்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட ஆவணங்களைப் பொங்குதமிழ் தளத்தில் யுனிகோட்டுக்கு மாற்றிக் கொள்ள முடிகிறது. ஆனால், இப்பணியை எதிர்மாறாகச் செய்ய முடியவில்லை. அதாவது யுனிகோட் ஆவணங்களை இண்டொவெப் ஆவணமாக மாற்ற முடியவில்லை இதற்கு மாற்று ஆலோசனை இருக்கிறதா? என்எச்எம் எழுத்துரு மாற்றியும் இந்தப் பிரச்சனையில் கைகொடுக்க மறுக்கிறது.

இந்த இண்டொவெப் செயலியை வாங்குவதென்றால் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும். அதன் விலை விபரம் என்ன? (தனிப் பயனுக்கு)

மீண்டும் நன்றிகள்

Post a Comment