தமிழில் கணினி செய்திகள்

ஆன்லைன் மூலமாக வலைப்பக்கங்களை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய

♠ Posted by Kumaresan Rajendran in ,, at February 09, 2011
என்னத்தான் இணையம் மூலமாக செய்ய முடியாது, என்று தேடிபார்த்தால் ஒன்றுமே இல்லை என்ற நிலை மட்டுமே உள்ளது. எந்த இடத்திற்கு சென்றாலும் இணையத்தினுடைய உதவி நமக்கு வேண்டும். இணையம் இல்லாமல் தற்போது எந்த ஒரு செயலும் நடைபெறாது என்ற ஒரு நிலை தற்போது உள்ளது. இணையத்தின் உதவியுடன் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும். உதாரணமாக ஆன்லைன் மூலமாக ரயில்வே ரிசர்வேஷனில் தொடங்கி டாக்குமெண்ட் கன்வெர்சன் வரை செய்ய முடியும். அந்த வகையில் வலைப்பக்கத்தினை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய முடியும். இவ்வாறு நாம் உருவாக்கும் இமேஜ் வலைப்பக்கமானது மிகத்தெளிவாகவும் வண்ணமயமாகவும் இருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் இது ஸ்கிரீன்சாட் போன்றதே, இதனை ஆன்லைன் ஸ்கிரீன் சாட் என்றே கூற வேண்டும்.

வலைப்பக்கங்களை இமேஜ் பைலாக கன்வெர்ட் செய்ய சுட்டி



இந்த தளத்திற்கு சென்று URL யை உள்ளீடு செய்யவும். பின் எந்த அளவிளான படம் வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்தாக Convert என்ற பொத்தானை அழுத்தவும். சில நிமிடங்களில் கன்வெர்ட் செய்யப்பட்டு டவுண்லோட் செய்வதற்கான லிங் கிடைக்கும். இந்த தளத்தில் நாம் இன்னும் பல்வேறு வசதிகளையும் பெற முடியும். உலவிகளில் வலைப்பக்கத்தினை ஸ்கிரீன்சாட் செய்வதற்கான பட்டியை சேர்க்கவும் முடியும். அதே வலைப்பக்கத்தில் அடிப்பகுதில் இதற்கான சுட்டியும் உள்ளது.


Save as image என்ற பட்டியினை உங்களுடைய உலவியில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்யவும். பின் நீங்கள் அந்த பட்டியை கிளிக் செய்வதன் மூலமாகவே இமேஜ் பைல்களை உருவாக்க முடியும். மேலும் பல வசதிகள் இந்த தளத்தில் உள்ளன. வலைமனையில் அடிப்பகுதியில் பல்வேறு விதமான கன்வெர்ட்டிங் ஆப்சன்கள் உள்ளது அதனை பயன்படுத்தியும் நாம் பல்வேறு வசதிகளை பெற முடியும்.


நீங்கள் விரும்பியவாறு வலைப்பக்கத்தினை இமேஜ் மற்றும் பிடிஎப் பைல் பார்மெட்டுக்களில் கன்வெர்ட் செய்ய முடியும். பிடிஎப் பைல் பார்மெட்டுக்களில் இருந்தும் டெக்ஸ்ட் பார்மெட்டாகவும் கன்வெர்ட் செய்து கொள்ள இந்த தளத்தில் உள்ள சுட்டியினை பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியும். Excel, Word, Powerpoint போன்ற பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த தளமானது பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.

2 Comments:

பகிர்வுக்கு நன்றி. ..வாழ்த்துக்கள்

Post a Comment