தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் 10 இயங்குதளம் ஜூலை 29 ல் வெளியீடு

♠ Posted by Kumaresan Rajendran in , at June 02, 2015
விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 இயங்குதளம் ஜூலை 29 ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களுக்கு சோதனை அடிப்படையில் இலவசமாக ப்ரிவியூ பதிப்பினை வழங்கியது. இந்த பதிப்பில் இருந்த குறைகளை நீக்கி முழு சிறந்த தொகுப்பினை விண்டோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, மிகச்சிறப்பான ஸ்டார்ட் மெனுவையும், மிக விரைவாக தொடங்குதளையும் , மறுதொடங்குதளையும் கொண்டுள்ளது. வைரஸ் தொல்லைகளிருந்து கணினியை பாதுகாக்கும் விதமாக விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் இலவசமாகவே விண்டோஸ் டிபெண்ட்டர் ஆண்டி மால்வேர் மென்பொருள் வருகிறது.

விண்டோஸ் 10 சிறப்பம்சங்கள்:

  • Cortana: இந்த வசதி தற்போது விண்டோஸ் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது விண்டோஸ் இயங்குதளத்திலும் வரஉள்ளது. இதன் மூலம் எளிமையாக நினைவூட்டல் (Reminders) , தகவல்களை மிக விரைவாக தேடும் வசதியையும் பெற முடியும்.
  • Microsoft EDGE: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய உலாவி, இதுவரை வெளிவந்த இயங்குதளங்களில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி இருப்பியல்பாகவே இருந்து வந்தது , இனி அதற்கு பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவி வெளிவர உள்ளது.
  • மைரோசாப்ட் ஆப்பிஸ்: விண்டோஸ் இயங்குதளங்கள் வெளியிடும் போது, ஆப்பிஸ் பதிப்புகளின் புது வெளியீடு வெளியிடப்படும்.  தற்போது விண்டோஸ் 10 இயங்குதளம் வெளிவர உள்ள நிலையில் மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் 2016 பதிப்பும் வெளிவர உள்ளது.
  • Xbox: எக்ஸ் பாக்ஸ் விளையாட்டு அப்ளிகேஷன் விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் இருப்பியல்பாகவே வெளிவர உள்ளது. இதன் மூலம் விண்டோஸ் கணினிகளை நெட்வோர்க்கில் இணைத்து விளையாட முடியும்.
இதுபோன்று பல்வேறு விதமான வசதிகளுடன் ஜூலை 29, 2015 அன்று விண்டோஸ் 10 இயங்குதளம் வெளிவர உள்ளது. தற்போது நீங்கள் வாங்கும் கணினியில் விண்டோஸ் 8.1 இயங்குதளம் இருப்பின் அதனை நீங்கள் விண்டோஸ் 10 ஆக புதுப்பித்து கொள்ள முடியும்.

8 Comments:

தகவலுக்கு நன்றி.

//பழனி. கந்தசாமி said

நன்றி பழனி கந்தசாமி.

வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ளும் அளவிற்கு விண்டோஸ் 10 வெளிவருமா?

//இரா.கதிர்வேல் said

கண்டிப்பாக வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் முந்தைய பதிப்புகளை விட விண்டோஸ் 10 சிறப்பாக இருக்கும்.

நான் சாதாரண பயனாளி மட்டுமே, நண்பரே.

நன்றி கதிர்வேல்.

//stalin wesley said

நன்றி stalin wesley.

dear sir , i have windows 7 it is not original ,this i will make windows 7 one of dealear shop, i have original key this not activate some problem.,, so i will possible windows10 changing,

Magicjack Support 1-800-653-4096, Customer Support For Magicjack

Post a Comment