தமிழில் கணினி செய்திகள்

எழுத்துபிழையை சரிசெய்ய

♠ Posted by Kumaresan Rajendran in at April 27, 2013
தட்டச்சு செய்யும் போது கண்டிப்பாக எழுத்துபிழை ஏற்படும், ஒரு சிலர் அதை கண்டறிந்து சரிசெய்து விடுவார்கள். ஆனால் ஒருசிலரால் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழையை கண்டறிய முடியாது. இதற்கு காரணம் நாம் அவசரம் அவசரமாக தட்டச்சு செய்வது மட்டுமே ஆகும். இதனை சரி செய்ய நாம் ஏதாவது ஒரு ஸ்பெல்செக் அப்ளிகேஷன் ஒன்றை நம் கணினியில் நிறுவியிருந்தால் தவறாக தட்டச்சு செய்யும் போது நாம் செய்யும் பிழையை சுட்டிகாட்ட ஏதுவாக இருக்கும். எழுத்துபிழையை சரி செய்ய உதவும் மென்பொருள்களில் tinySpell ஒரு இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் எளிமையாக எழுத்துபிழைகளை கண்டறிந்து சரி செய்ய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த அப்ளிகேஷனை தொடக்கம் செய்து விட்டு, பின் நீங்கள் விண்டோஸ் அப்ளிகேஷன் கொண்டு தட்டச்சு செய்யும் போது பிழை ஏதும் செய்தால் சுட்டிகாட்டி அதை சரி செய்வதற்கான இணைப்பும் கிடைக்கும்.


இந்த tinySpell அனைத்து விண்டோஸ் அப்ளிகேஷன்களிலும் இயங்கும், இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பயனர் விருப்பபடி அப்ளிகேஷனை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். வேண்டிய வார்த்தைகளை இணைத்துக்கொள்ளவும் tinySpell வழிவகை செய்கிறது.

2 Comments:

தமிழில் சரி செய்ய முடியுமா ?

உபயோகமான பகிர்வு நன்றி குமரேஸ்.

தமிழ் ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் செக் பண்றதுக்கு எதுனா சாப்ட்வேர் இருக்கா குமரேசன் ...!

Post a Comment