தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகளை மறைக்க

♠ Posted by Kumaresan Rajendran in ,, at April 19, 2013
இரகசியமாக தகவல்களை கணினியில் சேமித்து வைக்க நாம் ஏதாவது ஒரு கோப்புகளை மறைக்கும் மென்பொருளை பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்துவதால் இணைய இணைப்பு இருக்கும் பட்சத்தில் நம்முடைய கோப்புகளை திருட ஹேக்கர்களுக்கு வாய்ப்பு அதிகம். சாதாரணமாக தகவல்களை மறைத்து வைக்க விண்டோஸ் இயங்குதளத்திலேயே வழி இருக்கிறது.

விண்டோஸ் இயங்குதளத்தில் Folder Option வசதியை பயன்படுத்தி எளிதாக கோப்புகளை மறைத்துவிடலாம். ஆனால் இதனை யார் வேண்டுமானாலும் ஒப்பன் செய்துவிட முடியும். என்பதால் கணினி பயன்பாட்டாளர்கள் இதனை கையாள மாட்டார்கள். விண்டோஸ் இயங்குதளத்தில் Folder Option யை பயன்படுத்தி கோப்புகளை மறைத்துவிட்டு பின் இந்த Folder Option யை டிசேபில் செய்து விட்டால் எவராலும் நாம் மறைத்த கோப்பை எடுக்க முடியாது. ஆனால் நாம் கோப்பை மறைத்த வழியிலேயே சென்று Folder Option யை எனேபிள் செய்து விட்டால் மீண்டும் எடுத்து விடலாம் அதையும் தடுக்க ஒரு வழி உண்டு அவற்றை பற்றி கீழே விரிவாக காண்போம்.

எப்போதும் போல எந்தெந்த கோப்பறைகளை மறைக்க விரும்புகிறீர்களோ அதன் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Properties என்னும் தேர்வினை கிளிக் செய்யவும்.


பின் General டேப்பினை தேர்வு செய்து பின்Attributes: என்னும் விருப்பதேர்வில் Hidden என்னும் டிக் பாக்சை டிக் செய்துவிட்டு பின் OK செய்து விடவும்.


பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து Tools மெனுபாரை கிளிக் செய்யவும். அதில் Folder Option என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். 


View என்னும் டேப்பினை கிளிக் செய்து தோன்றும் வரிசையில் Hidden files and folders என்னும் விருப்ப தேர்வில் Don't show hidden files,folders,or drives என்பதை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் மறைத்த கோப்பானது முழுமையாக மறைந்து விடும். இதே வழியில் சென்று Show hidden files , folders, or drives என்னும் தேர்வினை தேர்வு செய்யும்போது மறைத்து வைத்திருந்த கோப்புகள் அனைத்தையும் காண முடியும். 

இதனை தடுக்க Folder Option யை கணினியில் டிசேபிள் செய்து விட்டால் போதும். போல்டர் ஆப்ஷனை டிசேபிள் செய்ய Group Policy யை நாட வேண்டும். விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தவும். ரன் விண்டோ தோன்றும் அதில் gpedit.msc என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும்.


தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி ஒப்பன் செய்யவும். User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer என்பதை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் வலதுபுறம்  Removes the Folder Options menu item from the Tools menu என்னும் அமைப்பின் மீது இரண்டு முறை கிளிக் செய்யவும்.


கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் தேர்வினை கிளிக் செய்து OK பொத்தானை அழுத்தவும்.


இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Tools ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் Folder Option நீக்கப்பட்டிருக்கும்.

இதையும் இதே வழியில் சென்று எனேபிள் செய்து விட்டு கோப்பினை எடுத்து விடுவார்கள் என்றால் நீங்கள் மற்றொரு பயனர் கணக்கினை விண்டோஸ் இயங்குதளத்தில் துவங்கவும். அது Standard user ஆக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். உங்களுடைய தற்போதைய பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை உருவாக்கிவிடுங்கள். உங்கள் நண்பர்கள் யாரும் உங்கள் கணினியை பயன்படுத்தும் பட்டசத்தில் அவர்கள் புதியதாக உருவாக்கிய கணக்கில் நுழைந்து கணினியில் பணியாற்ற சொல்லுங்கள். அவர்களால் குருப்பாலிசியை ஒப்பன் செய்ய இயலாது. போல்டர் ஆப்ஷனை ஒப்பன் செய்ய இயலாது. நீங்கள் வழக்கம் போல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து பயன்படுத்துங்கள். கோப்பு தேவைப்படும் போது மேலே கூறிய வழியில் சென்று எனேபிள் செய்துவிட்டு கோப்பினை பயன்படுத்த முடியும்.

3 Comments:

Useful information my friend.
Thank you.

Verygood important article.Thank You.
appan.pks,erode.
098429-95609

Post a Comment