தமிழில் கணினி செய்திகள்

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

♠ Posted by Kumaresan Rajendran in ,, at May 25, 2011
கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.

PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல் பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும்.  மேலும் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.


7 Comments:

பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி

place a sharing button below posts...i would like to share posts with friends without leaving your blog...place tell a friend sharing button

http://tellafriend.socialtwist.com/

...d...

hey,

a doubt. how to download pdf files from esnips.com? i wanted to download this http://www.esnips.com/doc/1c6d7c37-7d82-4119-8095-b01991940f98/Nikos-Kazantzakis---Zorba-the-Greek
that site asked me to download esnips downloader. even afte downloading it i'm not able to download the above pdf from above link...tell me the solution...d...

மிகவும் பயனுள்ள பதிவு

நண்பரே எனக்கு DONGAL UNLOCK SOFTWARE I பெற முடியுமா ?

Post a Comment