தமிழில் கணினி செய்திகள்

வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை ஒன்றினைக்க

♠ Posted by Kumaresan Rajendran in , at March 18, 2011
ஆடியோ மற்றும் வீடியோ கட், கன்வெர்ட் மற்றும் ஜாயின் செய்வதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. மேலும் ஒரே மாதிரியான ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் இணைக்கவும் அதிகமான மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கிறன.  ஒரு வீடியோவின் ஆடியோ மட்டும் இரத்து செய்து நமக்கு விருப்பமான ஆடியோவை இணைத்துகொள்ளும் மென்பொருள்கள் குறைவு, இதுபோன்ற மென்பொருட்கள் யாவும் விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இல்லையெனில் இணையத்தில் இருந்து இலவசமாக மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு கிடைக்கும் மென்பொருட்கள் யாவும் சிறப்புடையதாக இல்லை.இதுபோன்ற குறைகள் யாவும் இல்லாமல் இணையத்தில் இலவசமாக ஒரு மென்பொருள் கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் Add Video என்னும் பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். பின் Add Audio என்னும் பொத்தானை அழுத்தி எந்த ஆடியோ பைலை இணைக்க வேண்டுமோ அந்த ஆடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும். பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும். mp4, swf, wmv மற்றும் flv இவற்றில் எதாவது ஒரு பைல் பார்மெட் ஆகும்.

பின் கன்வெர்ட் செய்த பைலானது எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தெரிவு செய்து கொண்டு. Start பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய வீடியோவானது பிரிதொரு ஆடியோ இணைக்கப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேவ் செய்யப்பட்டிருக்கும். ஏதோ ஒரு வீடியோவிற்கு நீங்கள் விரும்பும் ஆடியோவை இணைத்து பாருங்கள் ஒரே காமெடியாகத்தான் உள்ளது. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் முடிவை கூறுங்கள்.

4 Comments:

hellow sir, thank you for your software.

அன்புடன் இரா.குமரேசன் அவர்களுக்கு!
வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை ஒன்றினணக்க.
என்ற மென்பொருள் பதிவு நல்லதொரு பதிவு. மிக்க நன்றி.
இன்னும் பல பயனுள்ள கட்டுரைகளை எதிர்பாத்து காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

- தாவீது யோசெப்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

Post a Comment