தமிழில் கணினி செய்திகள்

விண்டோஸ் எக்ஸ்புளோரர் டூல்பாரில் Copy, Paste, Delete பொத்தான்களை சேர்க்க

♠ Posted by Kumaresan Rajendran in , at February 17, 2011
கணினியை பயன்பாட்டாளர்கள் தினமும் கணினியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குறிப்பிடதக்கது காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் போன்றவை ஆகும்.  பலர் அதிகமாக காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் நடவடிக்கைகளில் ஈடுபடுவர், இந்த நடவடிக்கைகளை நாம் மெனுபார் மற்றும் சாட்கட் உதவியுடன் மட்டுமே மேற்கொள்வோம். மிஞ்சி போனால் மொளஸ் உதவியுடன் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த செயல்பாடுகளை செய்ய நாம் டூல்பாரில் பட்டன்களை நிறுவி அதன் மூலமும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதற்கு விண்டோஸ் ரிஸ்டரியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். 

காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ் லைபரரியில் இணைக்க:-

முதலில் ரன் (Winkey + R) விண்டோவை ஒப்பன் செய்து அதில் regedit என டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும், அடுத்ததாக ஒப்பன் ஆகும் விண்டோவில் கீழ்காணும் முறைப்படி ஒப்பன் செய்யவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\
Explorer\FolderTypes\{fbb3477e-c9e4-4b3b-a2ba-d3f5d3cd46f9}


கடைசியாக ஒப்பன் செய்யும் {fbb3477e-c9e4-4b3b-a2ba-d3f5d3cd46f9} என்பதை தெரிவு செய்யவும் அதில் தோன்றும் துணை பிரிவில் TasksItemsSelected என்பதை கிளிக் செய்யவும்.  வலது புறமாக தோன்றும் Default என்பதை டபுள் கிளிக் செய்யவும் தோன்றும் விண்டோவில் ஏற்கனவே Windows.print;Windows.email;Windows.burn;Windows.CscWorkOfflineOnline இந்த கட்டளைகள் இடம் பெற்றிருக்கும். அதில் Windows.Copy;Windows.Paste;Windows.Delete;  இந்த கட்டளைகளையும் சேர்த்துக்கொள்ளவும். பின் ஒகே செய்து விடவும்.

காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இணைக்க:-

முதலில் கூறியவாறே விண்டோஸ் ரிஸ்டரியை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் கீழ்கண்டவாறு பட்டியல்களை தேர்வு செய்யவும்.

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\
Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}


கடைசியாக தோன்றும் {5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7} என்னும் துணைப்பிரிவில் வலதுகிளிக் செய்து New > Key என்பதை தேர்வு செய்யவும் தோன்றும் விண்டோவில் TaskItemsSelected குறிப்பிட்டு ஒகே செய்யவும். பின் வலது புறமாக தோன்றும் Default என்பதை டபுள் கிளிக் செய்யவும் தோன்றும் தோன்றும் விண்டோவில் Windows.Copy;Windows.Paste;Windows.Delete; என்னும் கட்டளையை இணைக்கவும். 


பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து பார்க்கவும். டூல்பாரில் காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்கள் இணைக்கப்பட்டிருக்கும்.


இந்த காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை பயன்படுத்தி இனி எளிமையாக இந்த காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

3 Comments:

மிக்க நன்றிகள் அண்ணா எனக்கு ஒரு உதவி winrar password remover நல்ல மென்பொருள் கியுடன் தருவீர்களா

Post a Comment