தமிழில் கணினி செய்திகள்

வன்தட்டினை விருப்பபடி பிரிக்க - Disk Manager Free லைசன்ஸ் கீயுடன்

♠ Posted by Kumaresan Rajendran in ,, at January 05, 2011
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் வன்தட்டினை(Hard Disk) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C: D: E:) என தனித்தனி பகுதியாக வன்தட்டினை பிரித்து வைத்திருப்போம். முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த வன்தட்டினை மீண்டும் மறுசீரமைக்க முடியாது என நம்மில் சிலர் நினைப்போம் ஆனால் இவ்வாறு பிரித்த வன்தட்டினை நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஏன் நாம் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் கூடவே இதை நம்மால் செய்ய முடியும்.


இலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருட்கள் நம்பக தன்மையற்றதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க வேண்டுமெனில். நாம் மென்பொருளை உரிய உரிமத்துடன் பெற வேண்டும். நாம் இதை பணம் செலுத்தி பெற வேண்டும். இல்லாமல் இலவசமாகவும் பெற முடியும். அப்படிப்பட்ட மென்பொருள்தான் Disk Manager.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி1


இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Get Keycode என்ற பொத்தானை அழுத்தவும். உடனே உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு பெயர் மற்றும் கீ இரண்டும் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் முதலில் சென்ற தளத்திலேயே மென்பொருளை தரவிறக்கி கொள்ள சுட்டியானது இருக்கும். பின் நீங்கள் மென்பொருளை நிறுவும் போது இந்த பெயர் மற்றும் கீயை உபயோகித்து நிறுவிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளின் உதவியுடன், ஏற்கனவே பிரிக்க வன் தட்டினை நீங்கள் மீண்டும் டெலிட், பார்மெட்,ரீசைஸ் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் Xp/Vista/7 போன்ற இயங்குதளங்களில் செயல்படக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது Fat32,Fat16,Ntfs போன்ற பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது ஆகும். ஒரு பார்ட்டிசியனில் உள்ள பைல்களை மற்றொரு பார்ட்டிசியனுக்கு மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது.

3 Comments:

நன்றி நண்பா!!!
இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

How to sagregate for new system one month old?
for win 7

How to divide hard disk for new system now i am using with out sagregate harddisk for win 7

Post a Comment