தமிழில் கணினி செய்திகள்

INK புதிய Burning டூல்

♠ Posted by Kumaresan Rajendran in at September 22, 2010
CD/DVD க்களை காப்பி செய்ய  அனைவராலும் பயன்படுத்தும் மென்பொருள் NERO ஆகும். இது அனைவரும் அறிந்ததே இருப்பினும் சிலர் இணையத்தில் தேடி எதாவது ஒரு CD/DVD மென்பொருளை தரவிறக்கி பயன்படுத்தி வருவோம். அவ்வாறு இணையத்தில் இருந்து பதிவிறக்கி பயன்படுத்தும் மென்பொருள் நம்பக தன்மையானதாக இருக்குமா என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் இல்லை. இப்படி இருக்க சிலர் CD/DVD யை ரைட் செய்வது என்றாலே NERO மட்டும்தான் என்று உள்ளனர். இப்படி ஒரு பக்கம் இருக்க தினம் ஒரு மென்பொருள்கள் சந்தைக்கு வந்தவண்ணமே உள்ளது. அவற்றுள் எவை சிறப்பானதாக இருக்கும், நமது தேவைகளை பூர்த்தி செய்யும் என்று பல கேள்விகள் எழக்கூடும். இது போன்ற பல்வேறு விதமான தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக உள்ள மென்பொருள் இன்ங் ஆகும்.


மென்பொருளை பதிவிறக்க: Download
 
மெனபொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்வதற்கு .NET தேவைப்படும். 

 சிறப்பு வசதிகள்: 
  • இந்த மென்பொருளானது  Dual-layer DVD சப்போர்ட் செய்ய கூடியது ஆகும்.
  •  சாதாரண Data வுடன் ஆடியோவையும் சேர்த்து ரைட் செய்ய முடியும்.
  • இந்த மென்பொருளானது (ISO and BIN/CUE) ஆகிய இமேஜ் பைல்களை சப்போர்ட் செய்ய கூடியது ஆகும்.
  • Drag-n-drop செய்து கொள்ளும் வசதியும், இந்த இன்ங் ரைட்டரில் உள்ளது. 

என பல்வேறு விதமான வசதிகள் இந்த இன்ங் ரைட்டரில் உள்ளது, நீங்களும் ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள், சில சமயங்களில் உங்களுக்கு கைகொடுக்கும். 

2 Comments:

Neuro-வை விட INK மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தகவலுக்கு மிக்க நன்றி

Post a Comment